June 20, 2021

My Dharmapuri

My Dharumapuri Official website

தாமஸ் மன்றோ தூண்

“தாமஸ் மன்றோ தூண்” என அழைக்கப்படும் இந்தத் நினைவுச் சின்னம் திப்பு சுல்தான் போருக்கு பிறகு 1792முதல்1799 வரை தாமஸ் மன்றோ தருமபுரியில் தங்கி இராணுவ அதிகாரியாக பணியாற்றியதன் நினைவாகக் கட்டப்பட்டது.

அப்போது பாராமல் மாவட்டப் பகுதியாக இருந்த தருமபுரி பகுதியில் இராயக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நில வரி வசூல் தொடர்பாக கடும் பிரச்சனைகள் இருந்து வந்தன. நிலவரி வசூலிக்கும் நிலக்கிழார்கள் அரசாங்கம் நிர்ணயத்த தொகைகளை விடவும் கூடுதலாக வசூலிப்பதாக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தினர். இதுதொடர்பாக எழுந்த பூசல்களை தீர்க்க விளைந்த மன்றோ நில வருவாய்த் தொடர்பாக ஆழமான ஆய்வுகளில் ஈடுபட்டார். டெல்டா மாவட்டங்களைப் போலல்லாமல் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை அற்ற அல்லது குறைவான பகுதிகளில் எவ்வாறு வரிவசூலில் ஈடுபடுவது என்ற கேள்விக்கு விடை தேடினார்.இந்தத் தேடலே பிற்காலத்தில் இரயத்துவாரி முறை மன்ரோவில் நடைமுறைப்படுத்தப் பட்டதற்கு அடிப்படையாகும். இது அவர் தருமபுரியில் கற்ற பாடமே காரணமாகும். இப்போதுவரை அவரின் வரிவசூல்முறை பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு 1800ல் பெல்லாரி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் ஆக பணி புரியும் போது மதராஸ் அரசாங்கம் இராகவேந்திரர் மடத்திலிருந்தும் மற்றும் மந்த்ராலயத்திலிருந்தும் வரும் வருவாயை அரசுக்கு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அப்போது அது குறித்த விசாரணைக்காக அங்கு சென்ற போது ராகவேந்திரரிடம் பேசிய மன்றோ சமயோசிதமாகவும் தொலைநோக்கு உணர்வோடும் தனது அறிக்கையை மடத்திற்கு சாதகமாக வழங்கினார். இந்த ஆணை இன்றும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் மந்த்ராலயத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுவே – இந்தியர்களை அனுசரித்துபோகும் இயல்பே- அவரை பிற்காலத்தில் சென்னை மாகாண ஆளுநராக்கியது.

1814 முதல் 1827 வரை நீண்டகாலம் ஆளுநராக இருந்த மன்ரோ பிரிட்டீஸ் அரசாங்கத்தில் இருந்த மிகச் சிறந்த அறிவார்ந்த அதிகாரிகளில் ஒருவர்.

அவரின் நினைவாகத்தான் தருமபுரி வடிவேல் பால் டிப்போ முன்புள்ள இந்தத் தூண் அமைக்கப்பட்டது. தருமபுரி வரலாற்றில் இது முக்கியமானதோர் சின்னம். இதன் அருகே அவரால் புதுப்பிக்கப்பட்ட சோழர்கால குளமும் உண்டு.