June 20, 2021

My Dharmapuri

My Dharumapuri Official website

பனை‌ மரத்தின் அடிதொடங்கி நுனிவரை‌ என்னென்ன பகுதிகள், என்னென்ன பலன்கள்

 

நமது தமிழ் நாட்டின் மாநில மரமாக இருக்கும் பனை‌ மரத்தின் அடிதொடங்கி நுனிவரை‌ என்னென்ன பகுதிகள், என்னென்ன பலன்கள்’ என சுருக்கமாக பார்ப்போம்.

🌀அடிமரம் : வட்ட வடிவிலான நீர்தொட்டி

🌀நடுமரம் : வீடுகட்டும் விட்டமாக, உத்திரமாக ஏற்றம் அமைக்க, மாட்டுவண்டிகட்ட

🌀பத்தைமட்டை : தட்டி அடிக்க, தரைதேய்க்கும் பிரஷ்ஷாக

🌀உச்சிகொண்டை பகுதி : மரத்தொட்டி செய்ய, பாசன குளங்களில் மடையாக

🌀ஓலை : கூரைவேய, பதநீர், கஞ்சியை ஊற்றி குடிக்க, நிலத்தில் உவர்தன்மை நீக்கும் உரமாக, கலைப்பொருட்கள் செய்ய.

🌀பாளை : பதநீர், கள், பனைவெல்லம், கற்கண்டு

🌀பனங்காய் : நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு

🌀பச்சைமட்டை : வேலி, நார், முறம், செருப்பு, காய்ந்த பின்பு எரிப்பொருள்

🌀சாரை ஓலை : கூடை, பெட்டி, பாய், கைவினைப்பொருட்கள்

🌀குருத்தோலை : தோரணங்கள், அழகுசாதனபொருட்கள், ஓலைச்சுவடிகள்.

 

For Advertisement :

கோழி குழம்பு வச்சி அழுத்துபோசா , அப்படினா இந்த மாதிரி ஒரு முரை செஞ்சு பாருங்க..

 

இதையும் கடந்து நிறைய சொல்லலாம். அந்த காலத்தில் அரிசி மற்றும் தானியங்களை இடிக்கும் உலக்கை பனை மரத்திலிருந்து செய்யப்பட்டதே! கப்பல் கட்டவும், பாலங்கள் அமைக்கவும் பனைமரங்கள் பயன்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக செங்கல் சூலைக்காக பனை மரங்கள் அழிக்கபட்டு வருகிறது. ஆகையால் அரசே பனை மரங்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றி பாதுகாத்து வருகிறது. நாமும் அரசுடன் இணைந்து பனை மரங்களை வெட்டாமலும் வெட்டுபவர்களை தடுத்தும் பனை மரங்களை பாதுகாப்போம்.

பனைமரம் செழித்தால்
நாடு செழிக்கும் – என்பது அந்த காலத்தில் அரசர்களின் கூற்று.

இது வெறும் பனைமரம் மட்டும் அல்ல நமது முன்னோர்களுக்கு பல வகையில் பணம் பெற்று தந்த மரமாகும். நாமும் பனைமரம் வளர்த்து பல வகையில் பயன் பெறுவோம்.

பனைமரம் வளர்ப்போம்!
பாரம்பரியம் காப்போம்!!