June 20, 2021

My Dharmapuri

My Dharumapuri Official website

வெரிகோஸ் என்ற நரம்பு முடிச்சி நோய் இன்று பலருக்கு வந்து கொண்டிருக்கிறது!

வெரிகோஸ்

வெரிகோஸ் என்ற நரம்பு முடிச்சி நோய் இன்று பலருக்கு வந்து கொண்டிருக்கிறது. கெட்ட இரத்தத்தின் தேக்கமே வெரிகோஸ் நோயாக உருவெடுக்கிறது.

அதாவது கால்களில் இருந்து இதயத்தை நோக்கி கெட்ட இரத்தத்தை உந்தி தள்ள ஒரு விசை போன்ற வால்வுகள் முழங்காலின் பின்பகுதியில் உள்ளன. அது சாதாரணமாக திறந்தும் மூடியும் கெட்ட இரத்தத்தை இதயத்தை நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும்.

இந்த வால்வுகள் செயலிழக்கும் பொழுது தான் காலில் கெட்ட ரத்தம் அப்படியே தேங்கி, காலில் நரம்புகள் தடித்து வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது. பின்னர் தொடை வரை நரம்பு முடிச்சுக்கள் தோன்றும். அதுவே நாளடைவில் புண்கள், நரம்பு வெடிப்புக்கள் போன்ற பல பிரச்சினைகளை கொடுக்க ஆரம்பிக்கும்.

இப்படி இந்த வால்வுகள் பாதிப்படைய அடிப்படை காரணம் நீண்ட நேரம் நிற்றல், உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி இன்மையே.

இரத்தமானது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அது தேக்க நிலையை அடையும் பொழுது தான் வெரிகோஸ் போன்ற பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

ஆகவே நீண்ட நேரம் உட்கார்வதையும், நிற்றலையும் முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

உணவு உண்ணலை போல் நடைபயிற்சியை தினமும் செய்வது மிக அவசியம்.

இரத்தம் சீராக ஓட மூச்சு பயிற்சியும் சிறந்தது. இது ரத்த தேக்கத்தை சீர் செய்யும்.

உடல் எடை கூடாதவாறு இயற்கையான, ஆரோக்கியமான உணவுகளை உண்ணல் மிக அவசியம்.

உணவில் அரிசி, மாவு, கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளை குறைத்து தானியங்கள், பழங்கள், காய்கறிகளை அதிகமாக உண்ணும் பொழுது உடல் எடை சீராக இருக்கும்.

இதற்கு ஒரு எளிய ஆசனம் Leg Up Posture.

தரையில் படுத்து காலை சுவரில் சாத்தி வைத்து சீரான மூச்சியுடன் ஐந்து நிமிடம் படுத்திருங்கள்.

பின்னர் தரையில் காலை இறக்கி அப்படியே முகம் மேல் நோக்கியவாறு கண்ணை மூடி படுத்திருங்கள்.

இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். வலி குறையும். இதை அடிக்கடி செய்யுங்கள்.

என்றும் வரும் முன் காப்பதே சிறந்தது. அதனை மனதில் கொண்டு ஆரோக்கியம் பேணுவோம். வலியின்றி வாழ்வோம்.