
திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும்,,சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2ம் தேதியன்று கொரோனா, மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று உடல்நிலை மோசமடைந்த நிலையில் காலை 8 மணியளவில் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
More Stories
பிறந்தநாள் விழா இன்று
முன்னோர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்கள், உலக்கை மூலம் சூரிய கிரகணத்தை கணிக்கலாமா?
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!