
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காரிமங்கலம், பென்னாகரம் மாதிரி பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என, கல்வித்துறையினர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் பென்னாகரத்தில், அரசு மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், காலியாக உள்ள இரவு காவலாளி, நூலகர், ஆய்வ உதவியாளர் பணியிடங்கள், தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இரவு காவலாளி பணிக்கு, தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும், ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும். இப்பணிக்கு, மாதம், 4,500 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். நூலகர் பணியிடத்துக்கு, பிளஸ் 2 மற்றும் சி.எல்.ஐ.எஸ்., தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
இப்பணிக்கு, மாதம், 6,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் ஆய்வக உதவியாளர் பணிக்கு, எஸ்.எஸ்.எல்.சி., முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம், 6,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். மேற்கண்ட பணிக்கு, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் வரும், 30 அன்று மாலை, 5:00 மணிக்குள், சி.இ.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள, ஆர்.எஸ்.எம்.ஏ., அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். காரிமங்கலம், பென்னாகரம் யூனியன்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழி குழம்பு வச்சி அழுத்துபோசா , அப்படினா இந்த மாதிரி ஒரு முரை செஞ்சு பாருங்க..
More Stories
பிறந்தநாள் விழா இன்று
முன்னோர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்கள், உலக்கை மூலம் சூரிய கிரகணத்தை கணிக்கலாமா?
கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!